உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இல்லறம் அழகாக...

இல்லறம் அழகாக...


ஆண், பெண் இருவரையும் மனதாலும், உயிராலும் ஒன்றுபடுத்துவது திருமணம் என்னும் நிகழ்வு. திருமணத்திற்கு ‘நிகாஹ்’ என அரபியில் சொல்லப்படும். அதன் பொருள் ‘திருமண ஒப்பந்தம் செய்தல்’ என்பதாகும். அந்த ஒப்பந்தம் பற்றி சிலவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
நாயகத்திடம் ஒருவர், தனக்கு திருமணம் நடக்க இருப்பதாக சொன்னார். ‘பெண்ணை பார்த்து விட்டாயா..’ என அவர் கேட்டதற்கு ‘இல்லை’ என பதில் கிடைத்தது.
‘முதலில் பெண்ணை பார். இதுவே உங்களிடையே அன்பையும், நல்ல இணக்கத்தையும் ஏற்படுத்தும்’ என்றார் நாயகம்.  
பெண்ணை பார்க்காமல் மணம் செய்து, எதிர்பார்ப்புகள் ஏமாற்றமடைந்து விட்டால் இல்வாழ்க்கையே பாதித்துவிடும்.  எனவே இதை தடுக்க மணமகன் மணமகளையும், மணமகள் மணமகனையும் பார்க்க வேண்டும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !