பக்தியில் சிறந்த வேங்கமாம்பா
ADDED :1520 days ago
ஏழுமலையானின் பக்தைகளில் முக்கியமானவர் வேங்கமாம்பா. சிறுவயது முதல் ஏழுமலையான் மீது பக்தி கொண்டிருந்தார். பெற்றோரின் வற்புறுத்தலால் வெங்கடாஜலபதி என்பவரை திருமணம் செய்தார். ஆனால் குடும்பத்தை வெறுத்து ஏழுமலை மீதுள்ள தும்புரு தீர்த்தக்கரையில் துறவியாக தனித்து வாழ்ந்தார். இவரது சமாதி திருமலை வடக்கு வீதியில் உள்ளது. கோயிலில் தினமும் அபிஷேகம் கண்டருளும் போக சீனிவாசருக்கு இவர் காணிக்கையாக அளித்த முத்து மாலை ஒன்றுள்ளது. 1890ல் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியார் தயாரித்த கைங்கர்ய பட்டியலில் இந்த விபரம் இடம் பெற்றுள்ளது. வெங்கடேச மகாத்மியம், தத்வ கீர்த்தனம், கிருஷ்ண மஞ்சரி, நரசிம்ம விலாசம், பாலகிருஷ்ண நாடகம் ஆகியவை இவரால் இயற்றப்பட்டவை.