திருக்கோளக்குடி கோவில் ஆனி உற்சவம் துவக்கம்
ADDED :4876 days ago
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே திருக்கோளக்குடி ஆத்மநாயகி அம்பாள், கோளபுரீஸ்வரர் கோவிலில் ஆனி உற்சவ விழா துவங்கியது. இங்கு, கடந்த 23 அன்று காலை 10.45 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆனி உற்சவ விழா துவங்கியது. மலையில் இருந்து சுவாமி, அம்பாள் அடிவாரத்தில் எழுந்தருளினர். இன்று மாலை சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. ஜூலை 1 அன்று காலை தேரோட்டம் நடைபெறும். ஜூலை 2ல் தீர்த்தவாரியும், சுவாமி மலை ஏறுதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.