திருத்தங்கல் கோயில் ஆனிவிழா தேரோட்ட ஆலோசனை கூட்டம்
சிவகாசி: திருத்தங்கல் நின்ற நாரயணப்பெருமாள் கோயில்ஆனி விழா ,28ம்தேதி துவங்கி ஜூலை 9 முடிய 12 நாள் நடக்கிறது. 9ம் நாள் விழாவான ஜூலை 6ல் தேரோட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சுப்புலட்சுமி ஆர்.டி.ஓ., தலைமையில் நடந்தது. கோயில் நிர்வாக அதிகாரி தேவி, இன்ஸ்பெக்டர் செல்லையா, நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் பூமிநாதன், நகராட்சி சுகாதார அலுவலர் கண்ணன், பொது சுகாதார துறை சூப்பர்வைசர் ஜெயச்சந்திரன், தீயணைப்பு வீரர் பேச்சிக்காளை, நின்ற நாராயணப்பெருமாள் பக்த சபை தலைவர் பாலகிருஷ்ணன், செங்கமலதாயார் சேவா பக்த சபா டிரஸ்ட் தலைவர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தேர் விழா நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. மெயின் ரோட்டின் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விடுவது. தேரோடும் வீதிகளில் ரோடுகள் சீரமைப்பது. ரதவீதிகளில் இடையூறாக உள்ள மின் வயர்கள் மற்றும் கம்பங்களை ஒழுங்குபடுத்துதல், தேரோட்டம் வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தல், மருத்துவ குழுவினரை தயார் நிலையில் வைப்பது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.