எமதர்மனின் துாதுவன்
ADDED :1578 days ago
தன்னிடம் உள்ளதை பிறருக்கு கொடுத்து மகிழும் பறவை காகம் மட்டுமே. ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என மற்ற காகங்களை அழைத்த பின்னரே உண்ணுவது இதன் இயல்பு. இதற்கு சோறிட்டால் முன்னோர் ஆசி கிடைக்கும். காகம் சோறு உண்ணாத பட்சத்தில் முன்னோருக்கு குறை இருப்பதாக கருதுவர். எமலோகத்தின் வாசலில் காகம் காவல் காப்பதால் இதை ‘எமதர்மனின் துாதுவன்’ என்பர். பிதுர் தர்ப்பணம் செய்ய ஏற்ற தலமான கயாவில் உள்ள ‘காக சிலா’ என்னும் பாறையில் பிண்டம் வைத்து முன்னோர்களை வழிபட்டால் பாவம் நீங்கும்.