கோதண்டராமர் ஸ்வாமி கோயிலில் புரட்டாசி சனி வழிபாடு
ADDED :1472 days ago
தேவகோட்டை : தேவகோட்டை கோதண்டராமர் ஸ்வாமி கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தேவகோட்டை கோதண்டராமர் ஸ்வாமி கோயிலில் புரட்டாசி மாதத்தையொட்டி ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடக்கும். அதன்படி புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையொட்டி மூலவர் கோதண்டராமர் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. பாட்டாபிஷேக அலங்காரத்தில் ராமர், சீதை, லட்சுமணன் அருள்பாலித்தனர்.