ஓலப்பாளையம் வானர ராஜசிம்மன் சிறப்பு பூஜை
ADDED :1472 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே ஓலப் பாளையத்தில் பிரசித்தி பெற்ற வானர ராஜசிம்மன் கோவில் உள்ளது. புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை முன்னிட்டு காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக கூட்டம் இன்றி சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்ததாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.