முத்து மாரியம்மன் கோவிலில் 108 பால்குடம் நேர்த்திக் கடன்
ADDED :1468 days ago
அரியாங்குப்பம் : முத்துமாரியம்மன் கோவிலில் 108 பால்குடம் சுமந்து வந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
தவளக்குப்பம் அடுத்த தானம்பாளையத்தில் முத்து மாரிம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 11ம் ஆண்டு பால்குட ஊர்வலம் நேற்று நடந்தது.அம்மனுக்கு காலையில் விக்னேஸ்வர பூஜை, கணபதி பூஜை, காயத்ரி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.பக்தர்கள் 108 பால்குடங்களை ஊர்வலமாக சுமந்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.