வெள்ளி கவசத்தில் காளிப்பட்டி கந்தசாமி அருள்பாலிப்பு
ADDED :1521 days ago
சேலம் : சேலம் காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தேய்பிறை சஷ்டி பூஜை நடைபெற்றது.
தேய்பிறை சஷ்டியையொட்டி, சேலம் காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் இரண்டு டன் பூக்களால் கோவில் முழுவதும் மலர் மாலை தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டு அரண்மனை போல் காட்சியளித்த கொலு மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.