திருப்பரங்குன்றத்தில் கோயிலுக்குள் சுவாமி புறப்பாடு
ADDED :1584 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாதந்தோறும் கார்த்திகை அன்று உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து அலங்காரமாகி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா நடக்கும்.கொரோனா தொற்றால் வெள்ளி, சனி, ஞாயிறு கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடையுள்ளது. இதனால் நேற்று கார்த்திகையை முன்னிட்டு சுவாமி வீதி உலா ரத்து செய்யப்பட்டு, சேர்த்தியில் அபிஷேகம், பூஜை, அலங்காரமாகி கோயிலுக்குள் திருவாட்சி மண்டபத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.