பத்மநாப சுவாமி கோயில் சொத்தில் தொடர்கிறது மர்மம்!
                              ADDED :4873 days ago 
                            
                          
                          
திருவனந்தபுரம்: பத்மநாப சுவாமி கோயிலின் ரகசிய அறைகளில் இருந்து புதையல்கள் எடுக்கப்பட்டு சுமார் ஓராண்டு ஆகியும் கோயிலில் இருந்து கைப்பற்றப்பட்ட புதையல்களின் மதிப்பில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. மேலும் திறக்கப்படாத ரகசிய அறைகள் குறித்த மர்மமும் இன்னும் விடை காணப்படாமலேயே உள்ளது. இந்நிலையில் புதையல்களில் கண்டெடுக்கப்பட்ட ஆபரண கற்களின் மதிப்பு குறித்து ஜெர்மன் குழுவினர் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட நகைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வங்கி சேமிப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 29ம் தேதி நடைபெற உள்ள நிபுணர் குழு கூட்டத்தில் தொடரும் மர்மங்களுக்கான விடைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.