நாள் முழுவதும் அன்னதானம் தயார் நிலையில் பழநி கோயில்!
பழநி : பழநி மலைக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்திற்ககான பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளது. மலைக்கோயிலில், தற்போது மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை, அன்னதானம் வழங்கப்படுகிறது. நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இதையடுத்து இப்பணிகளை பழநி கோயில் நிர்வாகம் முடித்துள்ளது. உணவு வகைகளை விரைவில் தயாரிக்க, ஏற்கனவே உள்ள அடுப்புகளுடன், புதிய நீராவி கொதிகலன் அடுப்புகள் சமையல் அறையில் பொருத்தப் பட்டுள்ளன. இதன் மூலம் சாப்பாடு, பொறியல், குழம்பு வகைகளை சசமைக்க முடியும். இத்திட்டத்திற்காக காய்கறிகள் வைக்கும் அறையில் புதியதாக குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. மலைக்கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"ஏற்கனவே ஒரு நீராவி கொதிகலன் அடுப்புடன், புதிதாக அடுப்புகள் பொருத்துப்பட்டுள்ளன. அரசின் அறிவிப்பு வந்தபின், காலை 8 மணி முதல் இரவு 9 வரை அன்னதானம் வழங்கப்படும், என்றார்.