உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமர்நாத் பனிலிங்க தரிசன யாத்திரை: 1,000 பக்தர்கள் தடுத்து நிறுத்தம்!

அமர்நாத் பனிலிங்க தரிசன யாத்திரை: 1,000 பக்தர்கள் தடுத்து நிறுத்தம்!

ஜம்மு: அமர்நாத் யாத்திரை சென்ற, 1,000 பக்தர்களை ஜம்முவில் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். பாதுகாப்பான, சுகமான, போக்குவரத்து நெரிசலற்ற பயணத்திற்காக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், காஷ்மீர் மாநிலம் அமர்நாத்தில் உள்ள பனிலிங்க தரிசனத்திற்காக, லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர். அவர்களை மிகவும் பாதுகாப்பாக, அணி அணியாக போலீசாரும், மத்திய ரிசர்வ் போலீசாரும் அழைத்துச் சென்று வருகின்றனர். சிலர் நடந்தும், சிலர் குதிரை மீது அமர்ந்தும் பயணத்தை தொடர்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள், அமர்நாத் நோக்கிச் செல்லும் நுழைவுப் பகுதியில் நிறுத்தப்பட்டு, அணி அணியாக அனுப்பப்படுகின்றனர். இதனால், பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி செல்ல முடிகிறது. இவ்வாறு செல்லும் போது, இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், அடிக்கடி நிலச்சரிவு அபாயம் ஏற்படும் பகுதிகளான நாஸ்கிரி மற்றும் ஷிதானி நல்லா பகுதிகளில், பக்தர்கள் எச்சரிக்கையாகச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே தான், பக்தர்கள் அணி அணியாக அனுப்பப்படுகின்றனர். நேற்று, காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் அமர்நாத் யாத்திரைக்கான நுழைவுப் பகுதியில், 1,000 பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !