உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூச்சனி மாரியம்மன் கோயில் திருவிளக்கு பூஜை

சூச்சனி மாரியம்மன் கோயில் திருவிளக்கு பூஜை

திருவாடானை : திருவாடானை அருகே சூச்சனி மாரியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு லட்சார்ச்சனை நடந்தது. முன்னதாக நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.மாரியம்மன் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தார். சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க லட்சார்ச்சனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு கோயில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !