பழநி பக்தர்களின் வசதிக்காக நிலம் கையகப்படுத்த ஆய்வு
ADDED :1520 days ago
பழநி : பழநி வரும் பக்தர்களுக்கு வசதிகளை மேம்படுத்த நிலம் கையகப்படுத்துவதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்றன.
பழநி கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்த தங்குமிடங்கள் கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடங்கள், முடிக்காணிக்கை மையங்கள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவதற்காக 58 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் நேற்று டி.ஆர்.ஓ லதா தலைமையில் இடும்பன் மலை, தேவஸ்தானம் பூங்கா எதிரே, சுற்றுலா பஸ் நிலையத்துக்கு செல்லும் இணைப்புச் சாலை ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கோயில் துணை ஆணையர் செந்தில்குமார், தாசில்தார் சசி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.