உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

அருணாசலேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்,  பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் தன்னார்வலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

கொரோனா ஊரடங்கு நீடிப்பதால் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் கிரிவலம் செல்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் அருணாசலேஸ்வரர் கோவில் வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இந்த நிலையில் நேற்று கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகிறது. அருணாச்சலேஸ்வரர் கோவில் உண்டியல்கள் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுகிறது. எண்ணும் பணியில் தன்னார்வலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !