தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் அஷ்டமி பூஜை
ADDED :1791 days ago
கொடைக்கானல்: கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பத்ரகாளியம்மன் மற்றும் தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது. சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. பக்தர்கள் தேங்காய், மிளகு, நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். சுவாமிக்கு வடைமாலை சாத்தப்பட்டது. காலபைரவர் அலங்காரத்தில் காட்சியளித்த நிலையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.