உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழமையான அரச மரம் காற்றுக்கு சாய்ந்தது

பழமையான அரச மரம் காற்றுக்கு சாய்ந்தது

அவிநாசி: கருவலூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்த நுாற்றாண்டு பழமை வாய்ந்த அரசமரம் சாய்ந்தது. அவிநாசி அருகேயுள்ள கருவலுாரில் பழமையான விநாயகர் கோவில் உள்ளது; அங்கு, 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான அரச மரம் உள்ளது. இந்த மரத்தின் வேர்ப்பகுதியில், அரிப்பு ஏற்பட்டு பலவீனமாகி இருந்தது. கடந்த இரு நாட்களாக அப்பகுதியில் பலத்த காற்று வீசிய நிலையில், நேற்று நள்ளிரவு, 2:00 மணிக்கு மரம் சாய்ந்தது. இரவு நேரம் என்பதால், அங்கு யாரும் இல்லை. விபரீதம் எதுவும் ஏற்படவில்லை. இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !