வெங்கடேச பெருமாள் கோவிலில் கருட வாகன உற்சவம்
ADDED :1811 days ago
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள அப்புலு பாளையத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில், கருட வாகன உற்சவம் நடந்தது. இக்கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை மற்றும் ஏகாதசியையொட்டி நேற்று இரவு, வெங்கடேச பெருமாள், கருடவாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, பெருமாள், கருட வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தார். நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.