உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் நவராத்திரி திருவிழா; பக்தர்களுக்கு அனுமதி இல்லை

சதுரகிரியில் நவராத்திரி திருவிழா; பக்தர்களுக்கு அனுமதி இல்லை

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷம், அமாவாசை மற்றும் நவராத்திரி திருவிழா வழிபாடுகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இக்கோயிலில் நாளை (அக். 4) பிரதோஷம், அக். 6 அமாவாசை வழிபாடு, அக். 7 முதல் 15 ஆம் தேதி வரை நவராத்திரி திருவிழா வழிபாடுகள் நடக்க உள்ளது. இவ்விழாக்களில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பிற்காக, அரசின் வழிகாட்டு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் மேற்கண்ட விழாக்கள் பக்தர்கள் இன்றி நடைபெறுமென கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சதுரகிரி பக்தர்கள் ஏமாற்றம், மனவேதனை அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !