புரட்டாசி சனி விதியை புறந்தள்ளிய பக்தர்கள்
ADDED :1473 days ago
வத்தலக்குண்டு: கோட்டைப்பட்டி சென்றாய பெருமாள் கோயில் புரட்டாசி சனி விமரிசையாக நடைபெறும். ஊரடங்கு உத்தரவில் வெள்ளி, சனி, ஞாயிறு கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் திறக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. புரட்டாசி சனி பெருமாளுக்கு உகந்த நாளாகக் கருதப்படுவதால் அரசு உத்தரவால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் பக்தர்கள் ஏராளமானோர் கோவிலுக்கு சென்று வந்தனர். பூஜைகள் நடக்காததால் ஏமாற்றத்துடன் வெளியிலிருந்து சந்நிதியை நோக்கி வணங்கி விட்டு வந்தனர். விதிகளின்படி பூஜைகள் நடந்தது.