அரங்கநாதர் கோவிலில் சகஸ்ர தீப உற்சவம்
ADDED :1475 days ago
புதுச்சேரி : அரங்கநாதர் கோவிலில் சகஸ்ர தீப அலங்கார உற்சவம் நடந்தது.
புதுச்சேரி செயின்ட் தெரேஸ் வீதியில் அரங்க ராமானுஜர் பஜனை மடம் அமைந்துள்ளது. இங்குஇ ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாதர் சன்னதியில் நேற்று முன்தினம் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை வழிபாடு நடந்தது. சகஸ்ர தீப அலங்கார உற்சவம்இ ரங்கநாதர் சயன திருக்கோலத்தில் ஊஞ்சல் சேவை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது.ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி அன்புசெல்வன் உள்ளிட்டோர் செய்தனர்.