பரமக்குடியில் கோயில் நிலம் மீட்பு
ADDED :1477 days ago
பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள உரப்புளி கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது.
இக்கோயிலுக்கு சொந்தமான 20 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்துரோவர் இயந்திரம் மூலம் அளவீடு செய்யப்பட்டு80 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது.பரமக்குடி ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பதிவு பெற்ற நில அளவையர் குழு, உரப்புளி வி.ஏ.ஓ., சதீஷ்குமார், கோயில் நிர்வாகி நாகநாததுரை உள்ளிட்டோர் இருந்தனர்.தொடர்ந்து மீட்கப்பட்ட நிலத்தில் கோயில்நிர்வாகம் சார்பில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.