வளையல் போட்டா சுகபிரசவம்!
ADDED :1560 days ago
தேனி மாவட்டம் கம்பத்தில் சாமாண்டிஅம்மன் அருளுகிறாள், இங்கு வளையல் பிரசாதம் தரப்படுகிறது. இதே போல, திருச்சி உறையூர் குங்குமவல்லி அம்மன் கோயிலில் அம்பாளிடம் கர்ப்பமான பெண்கள் வளையல் வாங்கி அணிகிறார்கள். இதை அணிவதால் சுகப்பிரசவமாகும் என நம்புகின்றனர். சுகப்பிரசவம் ஆனதும், பல மடங்கு வளையல்களை வாங்கி அம்பாளுக்கு அணிவித்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.