சிவசைலம் கோயிலில் இன்று வருஷாபிஷேகம்
ADDED :4865 days ago
ஆழ்வார்குறிச்சி:சிவசைலம் சிவசைலநாதர்-பரமகல்யாணி அம்பாள் கோயிலில் இன்று (27ம் தேதி) இரண்டாவது வருஷாபிஷேகம் நடக்கிறது. சிவசைலத்தில் மேற்கு நோக்கி சிவசைலநாதர்-பரமகல்யாணி அம்பாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது வருஷாபிஷேகம் இன்று (28ம் தேதி) காலை ருத்ர ஜெபத்துடன் துவங்குகிறது. பின்னர் கும்ப ஜெபம், சிறப்பு பூஜைகளும், அதனை தொடர்ந்து மதியம் 12 மணியளவில் விமான அபிஷேகமும் நடக்கிறது.இரவு 7 மணியளவில் ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி அத்திரி மகரிஷிக்கு காட்சியளித்தல் வைபவமும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், தக்கார், நிர்வாக அதிகாரி செய்து வருகின்றனர்.