நெல்லையப்பர் கோயிலில் நவராத்திரி விழா துவக்கம்
ADDED :1799 days ago
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. நெல்லையப்பர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு று காலை சோமவார மண்டபத்தில் உற்சவமூர்த்திகளுக்கு ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் அம்பாள் சன்னதியில் ஹோமம், அம்பாளுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் லட்சார்சனை நடந்தது. வரும் 15ம் தேதி வரை தினமும் காலை 10.30 மணிக்கு சோமவார மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு ஹோமம், அபிஷேக, அலங்கார தீபாராதனை, மாலையில் அம்பாள் சன்னதியில் ஹோமம், அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் லட்சார்சனை நடக்கிறது.
கொலு வைபவம்: நவராத்திரியை முன்னிட்டு நெல்லையப்பர் கோயில் சேமவார மண்டபத்தில் கொலுவைக்கப்பட்டுள்ளது.