உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்துார் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

திருச்செந்துார் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

திருச்செந்துார்: தமிழ் மாதம் புரட்டாசி மகாளய அமாவாசை தினத்தில் இந்துக்கள் கடற்கரை, ஆற்றங்கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதணையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. மகாளய அமாவாசையை முன்னிட்டு கடற்கரையில் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்கொடுத்து வழிபட்டனர். பின்னர் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !