அம்மன் கோவிலில் யாக வேள்வி
ADDED :1499 days ago
திண்டிவனம் : திண்டிவனம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் யாக வேள்வி நடந்தது. திண்டிவனம் இலுப்பைத் தோப்பில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோவில் தசரா உற்சவத்தையொட்டி, கொலு மற்றும் யாக வேள்வி நிகழ்ச்சி நடந்தது. திண்டிவனம் சாணக்கியா கல்விக் குழுமங்களின் துணைத் தலைவர் வேல்முருகன், தாட்சாயணி முன்னிலை வைத்தனர்.நிகழ்ச்சியில் திண்டிவனம் அரிமா சங்கத் தலைவர் தலைவர் கோபிநாத், மாவட்ட தலைவர்கள் கார்த்திக், ராமமூர்த்தி, சந்தானம், ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். பூஜையைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.