தென்னவனூர் கண்ணபிரான் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4929 days ago
பரமக்குடி: பரமக்குடி அடுத்த போகலூர் ஒன்றியம் தென்னவனூர் ருக்மணி சத்யபாமா சமேத கண்ணபிரான், ஆஞ்சநேயர், கருடாழ்வார் கோயில் கும்பாபிஷேக விழா இம்மாதம் 27ம் தேதி யாக பூஜைகளுடன் துவங்கியது. கும்பாபிஷேகம், இன்று(ஜூன் 29) காலை 10 மணிக்கு நடக்கிறது. ஏற்பாடுகளை தென்னவனூர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.