உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மக்களுக்காக துர்கையிடம் பிரதமர் மோடி பிரார்த்தனை

மக்களுக்காக துர்கையிடம் பிரதமர் மோடி பிரார்த்தனை

 புதுடில்லி : நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, நேற்று துர்கா தேவியிடம் மக்களுக்காக பிரார்த்தனை செய்தார். நவராத்திரியின் ஐந்தாம் நாளான நேற்று துர்கையை பக்தர்கள் வழிபட்டனர். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, தன், டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:நவராத்திரியில் துர்கையை வழிபடுவது வழக்கம். எனவே, நானும் துர்கா தேவியை வணங்குகிறேன். அனைத்து விதமான சவால்களையும், இன்னல்களையும் எதிர்கொள்ள, தேவி, தன் பக்தர்களுக்கு மன வலிமையை தர வேண்டும். இதேபோல், அனைவரின் முயற்சிகளும் வெற்றிகரமாக முடிய துர்கையை பிரார்த்தனை செய்கிறேன்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !