உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடவேடம்பட்டி மாயம் பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழா

வடவேடம்பட்டி மாயம் பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழா

சூலூர்: வடவேடம்பட்டி மாயம் பெருமாள் கோவிலில் வரும், 16 ம்தேதி கல்யாண உற்சவம் நடக்கிறது.

சுல்தான்பேட்டை அடுத்த வட வேடம் பட்டியில் உள்ள, தும்பிக்கை ஆழ்வார், வீரமாச்சியம்மன், ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மாயம் பெருமாள், பக்த ஆஞ்சநேயர் கோவில்கள் பழமையானவை. இங்கு புரட்டாசி மாத திருவிழா வரும், 15 தேதி மாலை, 6:00 மணிக்கு சுதர்ஸன ஹோமத்துடன் துவங்குகிறது. சக்தி கலசம் அழைத்தல், மாயம் பெருமாள் கங்கைக்கு புறப்படுதல் உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன. வரும், 16 ம்தேதி அதிகாலை, 4:00 மணிக்கு, பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து பெருமாள் திருவீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !