மாரியம்மன் கோயில் விழா
ADDED :1721 days ago
திருவாடானை : திருவாடானை பிடாரிஅம்மன் கோயில் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூ தட்டு ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஏராளமான பெண்கள் பூ தட்டுகளுடன் ஊர்வலமாக சென்றனர். கோயில் முன்பு பொங்கல் வைத்து வழிபாடு செய்தபின் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு கோயில் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.