சமயபுரம் மாரியம்மனாக எழுந்தருளிய திருவுடைநாயகி
ADDED :1462 days ago
மணலி: நவராத்திரி திருவிழாவில், சமயபுரம் மாரியம்மனாக எழுந்தருளிய திருவுடை நாயகியை, பக்தர்கள் பரவசத்துடன் வழிப்பட்டனர்.சென்னை, மணலி, திருவுடைநாதர் சமேத திருவுடைநாயகி கோவில், நுாறாண்டு பழமை வாய்ந்தது. இங்கு, ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா, வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.இந்த ஆண்டும் நவராத்திரி திருவிழா, வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு நாளும், மூலவர் திருவுடை நாயகிக்கு, பிரத்யேக அலங்காரம் செய்யப்படும். நேற்று முன்தினம் இரவு, சமயபுரம் மாரியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதே போல், 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் நவராத்திரி விழாவில், உற்சவ தாயார், ராஜ ராஜேஷ்வரி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு, அருள்பாலித்தார்.