உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் சிட்டி யூனியன் வங்கியில் நவராத்திரி வழிபாடு

திருக்கோவிலூர் சிட்டி யூனியன் வங்கியில் நவராத்திரி வழிபாடு

திருக்கோவிலூர்: நவராத்திரியை முன்னிட்டு திருக்கோவிலூர் சிட்டி யூனியன் வங்கியில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருக்கோவிலூர் சிட்டி யூனியன் வங்கியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மகாவிஷ்ணுவின் அவதார காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் இடம் பெற்றிருந்தன. தினசரி மாலை 5:00 மணிக்கு வங்கி வாடிக்கையாளர்கள் வரவேற்கப்பட்டு பூஜைகள், பிரசாத விநியோகம் நடந்தது. நேற்று மாலை 5:00 மணிக்கு வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஒருங்கிணைந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. கிளை மேலாளர் செந்தில்குமார் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் வங்கி வாடிக்கையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !