வீடுகளில் சரஸ்வதி பூஜை உற்சாக கொண்டாட்டம்
ADDED :1559 days ago
சூலூர்: சூலூர் வட்டாரத்தில் வீடுகளில் நடந்த சரஸ்வதி பூஜையில், சிறுவர், சிறுமியர் உற்சாகமாக பங்கேற்றனர்.
நவராத்திரி விழாவை ஒட்டி, சூலூர் வட்டாரத்தில், பல வீடுகளில் ஐந்து படிகள், ஏழு படிகள், ஒன்பது படிகளில் கொலு வைக்கப்பட்டு, கடந்த ஒன்பது நாட்களாக தினமும் மாலை பூஜைகள் நடந்தன. பெண்கள், சிறுவர், சிறுமியர் பங்கேற்று பக்தி பாடல்களை பாடி மகிழ்ந்தனர். வீடுகளில் நடந்த சரஸ்வதி பூஜையில், புஸ்தகங்கள், நோட்டுகள், பேனா, பென்சில்கள் வைத்து வழிபட்டனர். இதில், குட்டீஸ்கள் உற்சாகத்துடன் பங்கேற்று வழிபட்டனர். இரு சக்கர வாகனங்களை கழுவி, மாலைகள் போட்டு வழிபட்டனர்.