உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் பரிவேட்டை நிகழ்ச்சி

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் பரிவேட்டை நிகழ்ச்சி

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் நவராத்திரி நிறைவு நாளான நேற்று மாலை சுவாமி பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.


நெல்லையப்பர் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 6ம் தேதி துவங்கியது. விழா நாட்களில் தினமும் காலை 10 மணிக்கு  ஹோமம், சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. அம்மன் சன்னதியில் மாலை 4 மணிக்கு அம்பாளுக்கு, ஹோமம், அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் லட்சார்ச்சனை நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று மாலை சுவாமி சந்திரசேகர் பரிவேட்டைக்காக குதிரை வாகனத்தில் ராமையன்பட்டிக்கு சென்றார். அங்குள்ள வன்னிமரத்தின் மீது அம்பு டும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமி டவுனுக்கு திரும்பிய போது புட்டாரத்தியம்மன் காட்சி கொடுத்தார். சுவாமி அம்பாளை 3 முறை வலம் வந்து தீபாராதனை நடந்தது. பின்பு சுவாமி சந்திரசேகர் நெல்லையப்பர் கோயிலை வந்தடைந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !