தைப்பூச விழாவில் சுட்ட வடைகள் ரூ.10,000க்கு விற்பனை
ADDED :7 hours ago
செங்கம்: செங்கம் அருகே தைப்பூச விழாவில், வெறும் கையால் சுடப்பட்ட வடைகள் 10,000 ரூபாய்க்கு விற்பனையாகின. திருவண்ணாமலை மாவட்டம் தொரப்பாடி நரசிங்கநல்லுாரில் பாலமுருகன் கோவில் உள்ளது. இங்கு தைப்பூசத்தை முன்னிட்டு காவடி எடுத்தல், தீமிதி விழா, பக்தர்கள் அலகு குத்துதல் செடல் விழா உள்ளிட்டவை நேற்று நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். மேலும் கொதிக்கும் எண்ணெய் சட்டியில், வெறும் கையால் சுடப்பட்ட 100 வடைகள் தலா 100 ரூபாய் வீதம் 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.