உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷீரடி சாய்பாபா சமாதி தினம்

ஷீரடி சாய்பாபா சமாதி தினம்


ராஜபாளையம்: ராஜபாளையம் ஷீரடி சாய்பாபா சமாதி தினத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

ராஜபாளையம் அய்யனார் கோயில் ரோடு பகுதியில் உள்ள ஷீரடி சாயி பாபா கோயில் நிகழ்ச்சியை முன்னிட்டு சாயி சத்சரித பாராயணத்துடன் துவங்கியது. பகல் 10:00 மணிக்கு108 சங்கினால் மகா ருத்ரா அபிஷேகம், விஷ்ணு சகஸ்ர நாமம், சாயி சகஸ்ர நாமம் பாராயணம், சாயி பஜனை நடந்தது. உற்ஸவ மூர்த்தி புஷ்ப சயன அலங்காரத்திலும், மூலவர் பூக்களால் அலங்கரிக்கப்பட்டும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மதியம் சிறப்பு அன்னதானம் முடிந்து மாலை 6:00 மணிக்கு துாப ஆரத்தி இரவு சேவையுடன் நிகழ்ச்சி முடிந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !