கேரளாவில் கனமழை: சபரிமலை பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
ADDED :1550 days ago
கம்பம் : கேரளாவில் கனமழை பெய்வதால், சபரிமலை செல்லும் பக்தர்களை தேனி மாவட்ட போலீசார், திருப்பி அனுப்பி வருகின்றனர்.
கேரளாவில் அக்., 16 முதல் கனமழை பெய்து வருகிறது. அக்., 16ல் கேரள டி.ஜி.பி., தமிழக போலீசாருக்கு அலர்ட் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதன்படி, தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களையும், ஏலத் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களையும் கம்பமெட்டு, குமுளி பகுதியில் தேனி மாவட்ட போலீசார் தடுத்து, திருப்பி அனுப்புகின்றனர். எர்ணாகுளம் செல்லும் கனரக வாகனங்களையும் அனுமதிக்கவில்லை. இது நாளை வரை தொடரும் என, போலீசார் தெரிவித்தனர்.