பிரதோஷம், பவுர்ணமி வழிபாடு: சதுரகிரியில் பக்தர்களுக்கு அனுமதி
ADDED :1449 days ago
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டிற்காக இன்று முதல் அக். 21 வரை நான்கு நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கபடுகின்றனர்.
காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். இரவில் மலையில் தங்க அனுமதி கிடையாது.பத்து வயதுக்குக் கீழான குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல்நலக் குறைவு உள்ளவர்கள் மலை ஏறுவதை தவிர்க்குமாறும், மற்றவர்கள் முகக்கவசம் அணிந்தும், அரசின் வழிகாட்டு விதி முறைகளை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டுமென கோயில் செயல் அலுவலர் விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மே மாதத்திற்கு பிறகு 6 மாத இடைவெளியில் தற்போது சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.