உச்சையனூர் நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்
ADDED :1481 days ago
பெ.நா.பாளையம்: சின்னதடாகம் அருகே உள்ள உச்சையனூர் அருள்மிகு உலகநாயகி உடனமர் ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் சுவாமி கோவிலில் அன்னாபிஷேக வழிபாடு நடந்தது.
ஆண்டுதோறும், சிவன் கோவில்களில் ஐப்பசி மாதம் வளர்பிறை, அசுவதி நட்சத்திர நாளில் அன்னாபிஷேகம் நடத்துவது வழக்கம். சின்னதடாகம் அருகே உள்ள உச்சையனூர் நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று மாலை, 5:00 மணிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அலங்கார பூஜை, தீபாராதனை, அன்னதானம் ஆகியன நடந்தன. விழாவையொட்டி, கோவில் வளாகத்தில் உள்ள துர்க்கை, தட்சணாமூர்த்தி, முருகன் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில், பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் அறக்கட்டளை சார்பில், ரத்தினசாமி செய்திருந்தார்.