உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூரான்கோட்டையில் விளக்கு பூஜை

கூரான்கோட்டையில் விளக்கு பூஜை

கடலாடி: கடலாடி அருகே கூரான்கோட்டையில் தர்ம முனிஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு மூலவர் தர்ம முனிஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பால், பன்னீர், இளநீர் திரவியப்பொடிகளால் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மூலவர் வெள்ளிக் கவசஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில் வளாகத்தில் விளக்கு பூஜையும் மாங்கல்ய பூஜை, சக்தி ஸ்தோத்திரம், அன்னதானம் உள்ளிட்டவைகள் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !