கோவில் சிலை சேதப்படுத்தியவருக்கு வலைவீச்சு
ADDED :1554 days ago
அன்னூர்: கோவில்பாளையம் அருகே கோவில் சிலையை சேதப்படுத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர். கோவில்பாளையம் அருகே, கீரணத்தம் வடக்கு தோட்டத்தில் ஜடாமுனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள முனீஸ்வரரின் சிலையை யாரோ சேதப்படுத்தி விட்டனர். இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில், கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலையை சேதப்படுத்தியவர்களை தேடி வருகின்றனர்.