உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆலங்குளம் அய்யனார் கோயிலில் கூட்டு ஐப்பசி பொங்கல் விழா

ஆலங்குளம் அய்யனார் கோயிலில் கூட்டு ஐப்பசி பொங்கல் விழா

உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை அருகே ஆலங்குளத்தில் பெரிய கருங்கார் உடைய அய்யனார் கோயில் உள்ளது. பழமையான இக்கோயிலில் ஐப்பசி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு கோயில் முன்புறம் 300க்கும் மேற்பட்ட அடுப்புகளில் பெண்கள் வரிசையாக பொங்கலிட்டு பூஜை செய்தனர். முன்னதாக மூலவர் 11 வகையான அபிஷேக ஆராதனைகள், மலர் அலங்காரம் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் இவ்விழாவில் பங்கேற்றனர். மழை வேண்டி ஒவ்வொரு ஆண்டும் சமத்துவ பொங்கல் விழா நடப்பதாக விழா குழுவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !