உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் இரண்டாம் ரோப்கார்: இணை கமிஷனர் தகவல்!

பழநி கோயிலில் இரண்டாம் ரோப்கார்: இணை கமிஷனர் தகவல்!

பழநி: பழநி கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன் கூறியதாவது: இரண்டாம் ரோப் கார் அமைக்க ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த நிபுணர் இரண்டு மாதங்களுக்கு முன் ஆய்வு செய்துள்ளார். தமிழக அரசு ரோப்கார் கமிட்டி ஒன்றை அமைக்க உள்ளது. இக்கமிட்டியின் பரிந்துரையின் பேரில் உலக அளவிலான டெண்டர் கோரப்படும். தற்போதுள்ள ரோப்காரில் மணிக்கு 400 பக்தர்கள் பயணிக்க முடியும். இரண்டாம் ரோப்காரில் மணிக்கு 1,400 பக்தர்கள் பயணம் செய்ய முடியும். பஞ்சாமிர்தம் போன்றவற்றை ஏற்றிச் செல்ல மெட்டீரியல் ரோப்கார் அமைக்கும் பணி ஒரு கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. இன்னும் ஒரு மாதத்தில் இப்பணி முடிவடையும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !