திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மீண்டும் தங்க ரதம்
ADDED :1443 days ago
திருப்பரங்குன்றம் : கொரோனா ஊரடங்கு தளர்வில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 5 மாதங்களுக்கு பின் நேற்று தங்க ரதம் புறப்பாடானது.தங்கரதம் இழுக்க ஒருநாள், நபர் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரமும், ஆண்டுக்கு ஒருமுறை இழுக்க ரூ. 25 ஆயிரம் டெபாசிட்டும் வசூலிக்கப்படுகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நேற்று தங்க ரதம் திருவாட்சி மண்டபத்தை சுற்றி வலம் வந்தது.