கல்லலில் கும்பாபிஷேக விழா
ADDED :1443 days ago
காரைக்குடி : கல்லல் பகச்சால விநாயகர், சவுந்திரநாயகி அம்பாள் சமேத சோமசுந்தரேஸ்வரர், குன்னமாகாளி கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.
அக்.22 அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து முதல் காலயாக பூஜை, இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் கால பூஜைகள், யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை பிரதான விமானம், பரிவார மூர்த்திகள், விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேகத்தில் கல்லல், காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.