ராஜகணபதி கோவிலில் பூஜை
ADDED :1616 days ago
சேலம்: சங்கடஹர சதுர்த்தியையொட்டி, சேலம், ராஜகணபதி கோவிலில் நேற்று சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். திரளானோர் தரிசனம் செய்தனர். கடைவீதியில் ஜவுளி எடுக்க மக்கள் கூட்டம் இருந்ததால், கோவில் முன் நெரிசல் ஏற்படாமல் இருக்க, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல், காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் உள்ள விநாயகர், ஆட்டையாம்பட்டி கை.புதூர் ராஜகணபதி, அரியானூர் மகா கணபதி கோவிலில் பூஜை நடந்தது.