அங்காளபரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1500 days ago
வடமதுரை : பழைய சித்துவார்பட்டியில் 24 மனை தெலுங்கு செட்டியார் நலிவிரியவர் குல தெய்வமான அன்னை அங்காளபரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த அக்.22ல் துவங்கி நான்கு கால யாக பூஜைகள் தொடர்ந்து நடந்தன. நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பாபிஷேகம் நடந்தது. திண்டுக்கல் காளஹஸ்தி குருக்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். சுற்று வட்டார மக்கள் மக்கள் திரளாக பங்கேற்றனர்.