உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணி

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணி

மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணிக்காக கோபுரத்தை புதுப்பிக்க சாரம் அமைக்கும் பணி நடக்கிறது.

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலும் ஒன்று. கீழ் தளத்தில் கூடலழகர் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அமர்ந்த கோலத்திலும், 2-வது நிலையில் சூரிய நாராயணர் தேவியருடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். 3-வது நிலையில் பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி அளிக்கிறார். கோபுர வேலைகளை செய்வதற்காக கோபுரத்தை புதுப்பிக்க சாரம் அமைக்கும் பணி நடக்கிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !